மயிலாடுதுறை: கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி தமிழர் கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இந்து மதத்திற்கு மாறி மீண்டும் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த டிமிட்ரி , ஏலோனா தமிழ்நாட்டின் மயிலாடுதுறைக்கு வருகை தந்து மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மென்பொறியாளர்களாக பணியாற்றும் இருவரும் உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சுற்றி வந்துள்ளனர்.
பிறப்பால் கிறிஸ்தவர்களான இருவரும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அதிக முறை வந்து சென்ற இந்த தம்பதி ஒரு கட்டத்தில் இந்து மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் கிறிஸ்தவத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். மேலும் இருவர்க்கும் தமிழர் கலாச்சாரம் பிடித்து போனதால் தமிழ் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து.
டிமிட்ரி , ஏலோனா தம்பதி தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மேல தாளம் முழங்க தமிழர் முறைப்படி இல்வாழ்க்கையில் இணைந்த கஜகஸ்தான் ஜோடியை நல்லாடைசுற்றுவட்டார கிராம மக்கள் வாழ்த்தி சென்றனர். இதை அடுத்து பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலுக்கு சென்ற டிமிட்ரி , ஏலோனா தம்பதி அங்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.