சென்னை : தாம்பரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பெண்கள் தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் கேட் பூட்டப்படவில்லை. 10 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் ஆங்காங்கே முள்வேலிகள் உடைந்துள்ளது. ஒரு ஆண் காவலாளி மட்டும் 12 மணி நேரத்திற்கு மேலாக பணியில் இருந்துள்ளார். பெண் காப்பாளர் விடுப்பில் இருந்துள்ளார். இரண்டு சிசிடிவி கேமராக்களைத் தவிர வேறு எதுவும் செயல்படவில்லை”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை
0