தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் பரிமளா தேவி நேற்று வெளியிட்டார். இதனை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,94,662, பெண் வாக்காளர்கள் 1,97,312, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 63 என மொத்தம் 3,92,037 வாக்காளர்களும், பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2,10,450, பெண் வாக்காளர்கள் 2,12,647, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 41 என மொத்தம் 4,23,138 வாக்காளர்களும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 3,26,676, பெண் வாக்காளர்கள் 3,25,279, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 110 என மொத்தம் 6,52,065 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் தாம்பரம் கவிதா, பல்லாவரம் ஆறுமுகம், சோழிங்கநல்லூர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.