சென்னை: தாம்பரம் அருகே வெந்நீர் பாத்திரம் தவறி விழுந்து, வெந்நீர் கொட்டியதில் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். கடப்பேரியில் கணபதி என்பவரின் குழந்தைகள் கிஷன், கரிசன் படுகாயம் அடைந்து எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கணபதி மனைவி அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு வெளியே சென்றபோது 2 குழந்தைகள் மீதும் பாத்திரம் விழுந்து காயம் ஏற்பட்டது.