சென்னை: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வழக்கில் கைதான காவலாளி மீது கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
0