தாம்பரம்: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வருகிறது.
28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளதால், பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வழக்கம்போல் பிராட்வே முதல் தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளையும் கூடுதலாக இயக்கபடவுள்ளது.