சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் மாநகர 500 பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஜபர்கான்பேட்டை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் வினோத் உள்ளிட்ட மூன்று பேர் திண்டிவனம் நோக்கி காரில் உறவினர் இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக இறங்கி உள்ளனர்.
அப்பொழுது அங்கே மனநல பாதிக்கப்பட்ட அயனாவரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் காரின் கதவைத் திறந்து வேகமாக மூடி உள்ளார். இதை சற்று எதிர் பார்க்காத வழக்கறிஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் கோபமடைந்து அவரை தாக்கியுள்ளனர். அப்பொழுது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், போலீசார் முன்னாடியே எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத வழக்கறிஞர்கள் தன்னுடைய காரின் கதவை எப்படி திறந்து மூடலாம் என்று கேட்டு மீண்டும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெரியவரை அடித்து கீழே தள்ளியபோது அப்பகுதியில் இருந்த சிமெண்ட் திட்டு மீது தலை வேகமாக மோதி கீழே விழுந்த பெரியவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை குறித்து அங்கே இருந்த காவலர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இறந்த பெரியவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அணிப்பி வைக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் வினோத் என்ற இரண்டு வழக்கறிஞர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இறந்தவர் ரங்கநாதன் வயது 59 அயனாவரம்(மனநலம் பாதிக்கப்பட்டவர்);
கொலையாளிகள்;
1. மணிகண்டன்(33) வழக்கறிஞர்
2. வினோத் (28)
சட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகனத்தின் கதவை இறந்த நபர் தட்டவும் கோபத்தில் இருவரும் ரங்கநாதனை அடித்து தள்ளி விட பின் தலையில் காயம் பட்டு இறந்தார்