Thursday, February 29, 2024
Home » தாம்பரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர், எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

தாம்பரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர், எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

by Arun Kumar

தாம்பரம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 14வது வார்டு, ராஜாஜி நகர், சரோஜினி தெருவில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் வழங்கினர்.

இதில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் மங்கையர்திலகம் ராஜ்குமார், நெடுஞ்செழியன், பகுதி செயலாளர்கள் இ.எஸ்.பெர்னாட், திருநீர்மலை ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

seven + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi