சென்னை: தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோக கம்பிகள் பழுதால், பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முதல் நடைமேடையில் நிற்பதால் பயணிகள் தவிப்பு. மின் இணைப்பை சரிசெய்யும் முயற்சியில் ரயில்வே மின் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.