சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2024-27ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கையின் தொடக்க நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்து, புதிய உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அப்போது, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 2026 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தமாகா பலமான இயக்கமாக வலம் வந்து கூட்டணிக்கு பலம் சேர்க்க வேண்டும். உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் தமாகா குரல் ஓங்கி ஒலிக்கும் வகையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஜவஹர்பாபு, ராஜம் எம்பி நாதன், பொருளாளர் இஎஸ்எஸ்.ராமன், துணை தலைவர்கள் விடியல் சேகர், சக்திவடிவேல், முனவர் பாஷா, மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, வேளச்சேரி லூயிஸ், சென்னை நந்து, தி.நகர் கோதண்டம், அருண் குமார், ேகாவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.