சென்னை: புதையல் எடுத்து தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக மந்திரவாதி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மந்திரவாதி சத்யபிரகாஷ் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். தியாகராயர் நகரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் பிரபாத், துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.