டெல்லி: தக் லைஃப் படத்தை திரையிடும்போது பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கன்னடம் குறித்து கமலின் பேச்சைத் தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை. கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட வெளிப்படையான அச்சுறுத்தல்கள் உள்ளன. திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் தீயணைப்பு கருவிகளை நிறுவுங்கள் என நீதிபதி தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
தக் லைஃப் பட விவகாரம்: கர்நாடக திரையரங்கு சங்கம் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
0