தைவான்: தைவான் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நாட்டின் கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில், 9.7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.