திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆடிட்டர் சுப்புரத்தினம் சந்தித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு அவரது ஆடிட்டர் வருகை தந்தார். ராமதாஸால் நேற்று நியமிக்கப்பட்ட, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆகியோரும் வந்துள்ளனர். மேலும், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் வேலூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பாரதி, முன்னாள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆடிட்டர் சந்திப்பு!!
0