டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா ஒரு நிலை உயர்ந்து, 829 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு நிலை தாழ்ந்து 814 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய வீரர் திலக் வர்மா 3, இங்கிலாந்து வீரர்கள் பில் சால்ட் 4, ஜாஸ் பட்லர் 5, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 6, இலங்கை வீரர் பதும் நிஸங்கா 7, நியுசிலாந்து வீரர் டிம் ஸெபெர்ட் 8வது இடங்களில் தொடர்கின்றனர். ஆஸி வீரர் ஜோஷ் இங்கிலீஸ் 6 நிலை உயர்ந்து 9ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். 10ம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹேப் உள்ளார்.


