சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகப்படுத்துவதாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கொடி பாடலையும் வெளியிட உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாளை முதல் நாடெங்கும் த.வெ.க. கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 9.15 மணிக்கு கட்சி கொடி அறிமுகம் செய்யவுள்ளார்.