சென்னை: 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை கவுரவிக்கிறார் த.வெ.க தலைவர் விஜய். இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு சிறப்பு செய்கிறார். இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். 18 மாவட்டங்கள் உட்பட 88 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களுக்கு பரிசு அளிக்கவுள்ளார். முதல் 3 இடங்கள் மட்டுமில்லாமல் கடின உழைப்பின் மூலம் தேர்ச்சி பெற்ற சில மாணவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்குகிறார். மாணவ, மாணவர்களை அழைத்து வரும் வாகன செலவு உள்ளிட்ட அனைத்தையும் தவெக ஏற்று நடத்துகிறது.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை கவுரவிக்கிறார் த.வெ.க தலைவர் விஜய்
0