பெய்ரூட்: அரசுப்படைகளுக்கும், சிரியாவின் முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் நடக்கும் மோதலில் 600 பேர் பலியாகி விட்டனர். சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கும் இடையே கடந்த 2 நாட்களாக மோதல் நடந்து வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் இந்த மோதல் வலுத்து வருகிறது. இதில் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசாத் படையை சேர்ந்தவர்கள் பலர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
சிரியாவில் மோதல்: 600 பேர் பரிதாப பலி
0