சுவிட்சர்லாந்து நாட்டின் வாலேஸ் அருகே பனிமலை சிகரங்கள் பல அமைந்துள்ளன. இந்த சிகரத்தின் உச்சியில் ராட்சத பனிப்பாறை ஒன்று வெகு நாட்களாக தொடர்ந்து உருகி வருகின்றது. இந்த நிலையில் நேற்று அந்த ராட்சத பனிப்பாறை பயங்கர சத்தத்துடன் மலை வழியாக வேகமாக சரிந்தது.தொடர்ந்து அந்த பனிப்பாறை முழுவதுமாக சரிந்து அடிவாரத்திற்கு வந்தது. இதன் காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த ஆல்பைன் என்ற கிராமம் பனிப்பாறைகள் மற்றும் பனி குவியல்களால் முழுவதுமாக மூடியது.
பனிச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்
0