கொழுக்கட்டை மாவு – 1 கப்,
ஸ்வீட்கார்ன் – 2,
பொடித்த வெல்லம் – 1 கப்,
தேங்காய் துருவல் – 1 கப்,
ஏலத்தூள் – சிறிது,
நெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
குக்கரில் ஸ்வீட்கார்னை வைத்து இரண்டு விசில் வரை வேகவைத்து உதிர்க்கவும். அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து விழுதை வாணலியில் போட்டு ஏலத்தூள், நெய் சேர்த்து கெட்டியாக பூரணம் கிளறவும். கிளறிய பச்சரிசி மாவில் சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுத்து படைக்கவும். (இது சோளம் சீசன் என்பதால் செய்யலாம்)