சுசூகி நிறுவனம், அவனிஸ் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, புதிய வாகன உற்பத்தி விதிகளின்படி, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில்நுட்பம் தற்போது ஸ்டாண்டர்டு வேரியண்டில் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 124 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.7 எச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆனால், புளூடூத் இணைப்பு வசதி இல்லை. 4 வண்ணங்களில் கிடைக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.91.400. இதற்கு அடுத்த வேரியண்டை விட இது சுமார் ரூ.1,800 குறைவாகும்.