சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், 4.2 அங்குல புதிய வண்ண டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. இரவில் மட்டுமின்றி பகலிடும் இந்த டிஎப்டி திரையில் விவரங்களை எளிதாக பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. சுசூகி ரைடு கனெக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிஸ்பிளேயுடன் புளூடூத் மூலம் மொபைல் போனை இணைத்துக் கொள்ளலாம். நேவிகேஷன் வசதியும் உண்டு. புதிய வாகன உற்பத்தி விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது.
இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 6.2 கிலோவாட் பவரையும், 5,000 ஆர்பிஎம்-ல் 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அக்சஸ் கூட்டரில் மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் புளூ, பியர்ல் கிரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய வண்ணங்கள் உள்ளன. தற்போது புதிதாக பியர்ல் மேட் அக்குவா சில்வர் நிறத்திலும் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.02 லட்சம்.