சென்னை: தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து நீக்கம். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீக்கியதாக இரண்டாம் ஆண்டு மாணவர் அஸ்லாம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் ஆணை!!
0