சென்னை: சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி வரும் ஞாயிறு (நவ.24) நடக்க உள்ளது. பள்ளி மாணவர்களின் ஓவிய திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், ஓவியப் போட்டியை ஞாயிறன்று சென்னை சந்தோம் ஹை ரோட்டில் உள்ள, சாந்தோம் உயர்நிலை பள்ளியில் சூரியன் எப்.எம். நடத்துகிறது. இந்த போட்டியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு நுழைவு கட்டணம் இலவசம்.
வர்ணஜாலம் என்ற தலைப்பில் நடக்க இருக்கும் இந்த போட்டியில் 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனது செல்லப்பிராணி’ தலைப்பிலும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘சூப்பர் ஹீரோக்கள்’ தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வருங்கால போக்குவரத்து’ தலைப்பிலும், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பென்சில் ஓவியத்தில் நினைவு சின்னங்கள்’ என்ற தலைப்பிலும் போட்டி நடத்தப்படும். மாணவர்கள் 8678935935 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து வர்ணஜாலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.
போட்டியின் விதிமுறைகள்: சார்ட் பேப்பர்கள் சூர்யன் எப்.எம் மூலம் வழங்கப்படும். வரைவதற்கு தேவையான உபகரணங்களை போட்டியாளர்களே எடுத்து வர வேண்டும். போட்டி காலை 10 மணிக்கு துவங்கும். பங்கேற்பாளர்கள் 9 மணி முதல் வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர். போட்டி நேரம் 90 நிமிடங்கள். பள்ளி அடையாள அட்டை மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண் அவசியம். பள்ளி சீருடையில் வருவது சிறந்தது. 8ம் வகுப்பிற்கு கீழ் உள்ள மாணவர்களுடன், அவர்களது பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ துணையாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள், 2 சிறப்பு பரிசுகள் மற்றும் 25 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.