சென்னை: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய் பீம் படக் குழுவினருக்கு எதிராக குறவர் நல்வாழ்வு சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
2D நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் நாடோடி பழங்குடியினர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடோடி பழங்குடியினர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி முருகேசன் தாக்கல் செய்த மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்தகையான உத்தரவை ரத்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சென்னை காவல்துறை, சூர்யா மற்றும் இயக்குனர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார் நீதிபதி.