சென்னை: உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும், மூத்த வழக்கறிஞருமான வி.கே.முத்துசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தந்தையும், மூத்த வழக்கறிஞருமான வி.கே.முத்துசாமி மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
வளர்த்து ஆளாக்கி, அவையத்து முந்தி இருப்பச் செய்த அருமைத் தந்தையினை இழந்து தவிக்கும் நீதியரசர் சுந்தரேஷ்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன், என கூறியுள்ளார்.