டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாக பேசியதாக கைதான பத்ரி சேஷாத்ரியின் ஜாமீன் மனு இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. குன்னம் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா முன்பு விசாரணைக்கு வருகிறது. பத்ரி சேஷாத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனுவும் இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.