புதுடெல்லி: மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு காலக்கெடு குறித்த தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி எம்பி எம்.ஏ.பேபி, எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி மூலம் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் எதிர்க்கிறது.ஆளுநர்கள் எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசுகளின் செயல்பாட்டைத் தடுக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா பதிவிடுகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடுவை கட்டாயமாக்கும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்திருந்தது.அதை கேள்விக்குரியதாக்கும் வகையில் ஜனாதிபதியின் கடிதம் மூலம் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பதை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கு கேள்வி ஜனாதிபதிக்கு கம்யூ. கட்சிகள் எதிர்ப்பு
0
previous post