புதுடெல்லி: உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக மூத்த நீதிபதி சூர்ய காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பிறப்பித்துள்ளார். தேசிய சட்ட சேவைகள் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 1987 ம் ஆண்டைய சட்ட சேவைகள் அதிகார சட்டம் பிரிவு 3 ஏன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி அந்த பதவிக்கு நீதிபதி சூர்யகாந்தை தலைமை நீதிபதி நியமித்துள்ளார். இதற்கு முன் இந்த பதவியில் மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் இருந்தார். நீதிபதி கவாய் சமீபத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கு சட்ட சேவைகளை அளிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழு தலைவராக நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
0