புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று எம்.எல்.சி.கவிதா தாக்கல் செய்திருந்த வழக்கில், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஒருநாள் அவகாசம் வழங்கிய உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கவிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் கவிதா ஜாமீன் மனு இன்று விசாரணை
48