புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் ஓய்வு பெற்றதால் 34 நீதிபதிகள் பணியிடம் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் தற்போது 2 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் பி ஆர் கவாய், சூர்யா காந்த், ஹிருஷிகேஷ் ராய், ஏஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட கொலிஜியம் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. அதில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் ஒருமனதாக பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு டெல்லி தலைமை நீதிபதியை பரிந்துரைத்தது கொலிஜியம்
0