சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனவரி 22ம் நாளே அவ்வழக்கு இறுதி விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கும் நிலையில், வலுவான வாதங்களுடன் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும். வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் 22ம் தேதி இறுதி விசாரணை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு இடம் தரக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
122