சென்னை: ஜுன் முதல் இதுவரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு 54 டி.எம்.சி. நீர் மட்டுமே தந்துள்ளது, இன்னும் 83 டி.எம்.சி. நீர் தர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை, கர்நாடகாவின் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ளது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்
சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
ஜுன் முதல் இதுவரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு 54 டி.எம்.சி. நீர் மட்டுமே தந்துள்ளது, இன்னும் 83 டி.எம்.சி. நீர் தர வேண்டும். இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை. ஏதோ எதிரிநாட்டுடன் மோதுவதை போல் கருதுகின்றனர். அல்லது நாம் சலுகை கேட்பதை போல் கருதுகின்றனர். இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் விதித்த விதிபடிதான் நாட்டில் உள்ள மக்கள் நடக்க வேண்டும். ஆனால் ஒரு அரசாங்கமே அதன் படி நடக்க முடியாது என்பது கூறுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. என்னை பொறுத்த வரையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்த துறையை பார்த்துள்ளேன்.
முதல்வர் சித்தராமையா, எனக்கும் தலைவருக்கும் வேண்டியவர். நீர்வளத்துறை அமைச்சரும் எனக்கு தெரிந்தவர்தான், ஆனால் இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சிரியமாக உள்ளது.
நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலான்மை ஆணையத்திடம் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துவோம். அங்கேயும் நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதில் ஒன்றிய அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் என அமைச்சர் கூறினார்.
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசபட்ட விவகாரத்தில் ஆளிநரின் நிலைபாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கூறியதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதற்கேன ஒரு அரசியல் சட்டம் இயற்றபட்டுள்ளது. எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அரசியல் சட்டப்படி நடக்க வேண்டும். ஆனால் பெரியவர்களாக இருக்க கூடிய காரணத்தாலேயே, நாங்கள் அரசியல் சட்ட விதிபதி நடக்க மாட்டேன் என கூறுவது தவறானது. பெரிய பொருப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்கமாட்டென் என கூறினார். பின் சாதாரண குடிமக்கள் எவ்வாறு சட்டத்துக்கு பணிவார்கள். எனவே இந்த போக்கு சரியானது இல்லை. இந்த விளையாட்டைஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதும் சரியானது அல்ல அமைச்சர் துரைமுருகன் கூறினார்.