புதுடெல்லி: கடந்த 2006-2011ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ரூ.44 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை சீராய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணை நடத்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.