டெல்லி: நீட் முறைகேடு தொடர்பான வழக்கில் மறுதேர்வுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. நீட் முறைகேடு திட்டமிட்டு பெரிய அளவில் நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நீட்தேர்வை ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது. நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதற்கான தரவுகள் இல்லை என்று கூறியுள்ளது.