குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பிட்ட சில கைதிகளை விடுவிப்பதற்காக விதிகளை குஜராத் அரசு பயன்படுத்தியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆக.10ம் தேதி 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது. 11 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு வழக்கு தொடரப்பட்டது. 11 பேரும் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.