புதுடெல்லி: நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இத்தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதற்கட்டமாகவும், அதன் பின்னர் அதேநாளில் மாலை 3.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறயுள்ளது. இரண்டு கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் ஒரு முறையீடு வைத்தார்.
அதில், “நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படவுள்ளதால், அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், “வழக்கை ஜூன் 2ம் தேதிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.