சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 241 ஜூனியர் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Junior Court Assistant.
காலியிடங்கள்: 241.
சம்பளம்: ரூ.35,400- 72,040.
வயது: 08.03.2025 தேதியின்படி 18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து, நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்படிக்கும் செயல் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங் அப்டிடியூட் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.250/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2025.