டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வதில் சிக்கல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பிரிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலக உத்தரவு திரும்பப் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.