டெல்லி: மணிப்பூரில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தின் குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை விசாரிப்பது கடினம் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மனுவில் வன்முறை, போதைப்பொருள் கடத்தல், வனப்பகுதி அழித்தல் என அனைத்தையும் ஒரே மனுவில் குறிப்பிட்டதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.