புதுடெல்லி: டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் தொடர்பான டெல்லி சேவைகள் அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனுத்தாக்கல் செய்து இருந்தது. இப்போது டெல்லி சேவைகள் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டு விட்டது.
எனவே டெல்லி அரசு முன்பு தாக்கல் செய்த மசோதாவை திருத்துவது அவசியம் என்று டெல்லி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிட்டார். இதை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டு மனுவை திருத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.