புதுடெல்லி: கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 76 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரையும் கடந்த 2022ம் ஆண்டு, வில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரித்து தீர்ப்பை ரத்து செய்ததுடன், வழக்கை வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு மேல்முறையீடு
previous post