திண்டிவனம்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் எம்பி, கடந்த 2006ல் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தவுடன் ஆதரவாளர்களுடன் வீட்டிலிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியது. இதில் அவரின் ஆதரவாளரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இதற்கு பாமகவினர்தான் காரணம் என்று 26பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி நீதிபதியிடம் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடந்தது.