சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வி பெறுவதற்கான துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் நேற்று தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 4முதல் 11 வரையிலும் 10ம் வகுப்பு ஜூலை 4-் 10ம் தேதி வரையும் நடைபெறுகிறது.