சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் உரையாற்றிய மூட நம்பிக்கைப் பேச்சாளரை கைது செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த மூட நம்பிக்கை பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? என கேள்வி எழுப்பினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை தேவை. அசோக்நகர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை பேச வைத்துள்ளனர். அரசு பள்ளியில் அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அரசு பள்ளியில் பேச்சாளர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.