Wednesday, April 24, 2024
Home » சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இன்று இரவு பலப்பரீட்சை; பிற்பகலில் குஜராத்-கேகேஆர் மோதல்

சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இன்று இரவு பலப்பரீட்சை; பிற்பகலில் குஜராத்-கேகேஆர் மோதல்

by MuthuKumar

ஐதராபாத்:ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. ஐதராபாத் முதல் போட்டியில் ராஜஸ்தான், 2வது போட்டியில் லக்னோவிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரிபுருக் ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கேப்டன் மார்க்ரம், அன்மோல்பிரீத் சிங், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், அடில்ரஷித், உம்ரன்மாலிக் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர். மறுபுறம் பஞ்சாப் முதல் 2 போட்டியிலும் வென்றுள்ள நிலையில் இன்று ஹாட்ரிக் வெற்றி உத்வேகத்தில் உள்ளது. கேப்டன் தவான், அப்சிம்ரன் சிங், ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, ஷாருக்கான் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம்கரன் வேகத்தில் அசத்துகின்றனர். இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதி உள்ளன. இதில் ஐதராபாத் 13, பஞ்சாப் 6ல் வென்றுள்ளன.

முன்னதாக மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹர்திக்பாண்டியா தலைமையான குஜராத் 2 போட்டியிலும் வென்று சூப்பர் பார்மில் உள்ளது. சுப்மான்கில், சாய்சுதர்சன், டேவிட் மில்லர் பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் ஷமி, ரஷித்கான், அல்சரி ஜோசப் அசத்தி வருகின்றனர்.

மறுபுறம் கேகேஆர் முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தாலும் கடைசி போட்டியில் பெங்களூருவை சாய்ந்த தெம்பில் உள்ளது. ரமனுல்லா குர்பாஸ், ரிங்குசிங் வலுசேர்க்கும் நிலையில் ஷர்துல்தாகூர் கடைசி போட்டியில் அதிரடியில் அசத்தினார். கேப்டன் நிதிஷ் ரானா, ரஸ்சல் ரன் எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பவுலிங்கில் வருண்சக்ரவர்த்தி, சுனில் நரேன் வெற்றிக்கு பக்கபலமாக உள்ளனர். இரு அணிகளும் கடந்த சீசனில் ஒருமுறை மோதியதில் குஜராத் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

8 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi