கேப் கேனவெரல்: கடந்த ஜூன் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாள் பயணமாக சென்ற விண்வெளி வீரர்கள் 2 மாதத்துக்கும் மேல் விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர். விண்வெளி வீரர்கள் சென்றுள்ள போயிங் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னையால் தான் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில்,நாசா மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில்,
‘‘ சோதனை விண்கலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானதும் அல்ல, அதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதும் அல்ல. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். கொலம்பியா விண்கலம் விபத்து எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அதனால் வரும் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ்சின் டிராகன் விண்கலம் இரண்டு விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் யாருமின்றி அடுத்த மாதம் பூமி திரும்பும்.