சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மே 24, 31, ஜுன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஐதாராபாதிலிருந்து கொல்லதுக்கும், மே 27, ஜூன் 2, 9, 16, 23, 30, ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து ஐதராபாத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
0