சென்னை: கோடையில் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. மார்ச் இறுதிக்குள் செயல்திட்டத்தை இறுதி செய்து; வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளுக்கு தனியாக செயல் திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடையில் வெப்ப அலையை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் பேரிடர் மேலாண்மைத்துறை ஆலோசனை நடத்தியது. பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், தொழிலாளர் நலன், பேரிடர் மீட்பு, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Advertisement


