துளசி + தேன் பேக்:
* 1 மேசைக்கரண்டி துளசி (Basil) அரைத்த விழுது
* 1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:
இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இது கருமை மற்றும் பருக்கள் குறைக்க உதவும்.
கடலை மாவு + பசும்பால் பேக்:
* 2 மேசைக்கரண்டி கடலை மாவு (Besan/Gram flour)
* 1 மேசைக்கரண்டி பசும்பால்
* சில துளிகள் எலுமிச்சை சாறு
செய்முறை:
இதனை பேஸ்ட் மாதிரி கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். பிறகு மெதுவாக தேய்த்து கழுவவும். இது
முகத்தைப் பிரகாசமாகும்.
கற்றாழை ஜெல் + எலுமிச்சை பேக்:
* 1 மேசைக்கரண்டி ஆலோவேரா ஜெல்
* 2-3 துளிகள் எலுமிச்சைச் சாறு
செய்முறை:
இவற்றை கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைக்கவும். கழுவும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்தவும். கற்றாழை முகத்தின் மாசுக்களை நீக்கி புத்துணர்ச்சிக் கொடுக்கும். சரும
அலர்ஜிக்கும் கற்றாழை நல்ல மருந்து.
மஞ்சள் பொடி + தயிர் முகக்கவசம்:
* 1 மேசைக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்
* 2 மேசைக்கரண்டி தயிர்
செய்முறை:
இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் வைக்கவும். பிறகு சுடுநீரில் கழுவவும். இது முகத்தில் கருமை மற்றும் தழும்புகளை நீக்கும். சருமத்தை உடனடியாக பளிச்சென்று மாற்றும். ஏதேனும் திடீர் விழாக்கள், நிகழ்வுகள் என்றால் கூட இந்த பேக் கைகொடுக்கும்.
பட்டை பொடி + தேன் பேக் :
* 1 மேசைக்கரண்டி பட்டை (Cinnamon) பொடி
* 1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:
இவற்றை பேஸ்ட் போல் கலந்து முகத்தில் மெதுவாக தடவவும். 10-12 நிமிடம் மட்டும் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். (பட்டை சிலருக்கு எரிச்சல் உண்டாக்கலாம், எரிச்சல் அதிகமாக இருந்தால் கழுவிவிடவும்). இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இயற்கையான பளிச் நிறத்தை வழங்கும்.
கவனிக்கவேண்டியவை:
*எலுமிச்சைச் சாறு சருமத்தை சென்சிடிவ் ஆக்கும். அதிக நேரம் வைக்கவேண்டாம்.
*பேக்ஸ் போட்டு முடிந்ததும் மொய்ஸ்சரைசர் கட்டாயம் பயன்படுத்தவும்.
*வாரத்திற்கு 2 அல்லது 3 முறை போதுமானது.
– விஜி